Categories
உலக செய்திகள்

இன்னைக்கு என்ன தினம் தெரியுமா….? இந்தியா இன்று அனுசரிப்பு…. வெளிவந்த சுவாரஸ்யமான தகவல்கள்….!!

உலகம் முழுவதும் அக்டோபர் 31 ஆம் தேதியன்று சர்வதேச சிக்கன தினமாக கொண்டாடப்படுகிறது.

இத்தாலியில் உள்ள மிலன் நகரில் 1924 ஆம் ஆண்டு முதன்முதலாக சர்வதேச சேமிப்பு வங்கிகளின் காங்கிரஸ் உலக சிக்கன தினத்தை கொண்டாடியது. அப்போதிருந்த இத்தாலிய பேராசிரியரான பிலிப்போ ரவிசா அக்டோபர் 31 ஆம் தேதியை சர்வதேச சிக்கன தினம் என்று அறிவித்தார். மேலும் இந்தியாவில் ஆண்டுதோறும் உலக சிக்கன தினம் அக்டோபர் 30ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஆனால் மற்ற நாடுகள் அனைத்தும் அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடுகின்றனர். இந்த நாளை உலக சேமிப்பு தினம் என்றும் அழைக்கின்றனர். அதாவது முதலாம் உலகப் போருக்குப் பின் வங்கிகளின் மீது மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதும், அவர்களிடம் சேமிப்பு பற்றிய நன்மையை எடுத்துரைப்பதும் இத்தினத்தின் முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது.

குறிப்பாக இந்தியாவின் முன்னாள் பிரதமரான இந்திராகாந்தி 1984ம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இதனால் நாம் ஆண்டுதோறும் அக்டோபர் 31 ஆம் தேதியை இந்திராகாந்தி நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30-ம் தேதி இந்தியா உலக சிக்கன தினமாக கொண்டாடுகிறது. மேலும் ‘சேமிப்பின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வது’ இது தான் இந்த ஆண்டிற்கான கருப்பொருளாகும்.

Categories

Tech |