உலகில் அதிக பலம்வாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் மத்திய நிதித்துறை அமைச்சர் இடம்பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள பிரபல பத்திரிக்கை உலகின் மிகவும் பலம்வாய்ந்த 100 பெண்களின் பட்டியலை 18 ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டும் உலகின் பலம்வாய்ந்த 100 பெண்களின் பட்டியலானது வெளிவந்துள்ளது. அதில் மத்திய நிதித்துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் 37 வது இடத்தை பிடித்துள்ளார். குறிப்பாக அவர் தொடர்ந்து 3 ஆண்டுகளாக இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
மேலும் கடந்த ஆண்டு 41வது இடத்தையும் 2019 ஆம் ஆண்டு 34வது இடத்தையும் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்தியாவில் உள்ள HCL Technologiesன் CEO ரோஷினி நாடார் 52வது இடத்தையும் பயோகான் நிறுவனத்தின் நிறுவனர் கிரண் மஜூம்தார் ஷா 72வது இடத்தையும் IBOவில் பிரபலமான நைகா நிறுவனத்தின் CEO ஃபால்குனி நாயர் 88வது இடத்தையும் பிடித்துள்ளனர். குறிப்பாக அமெரிக்காவின் துணை அதிபரான கமலா ஹாரிஸ் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.