Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி : இந்திய அணியுடன் இணைந்தார் ஜடேஜா

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய வீரர்கள் அனைவரும் பாதுகாப்பு வளையத்திற்குள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

வருகின்ற ஜூன் 2 ம் தேதி விராட் கோலி  தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்திற்கு  சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது . இதில் இந்திய அணி 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. முதலில் நியூசிலாந்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மோதுகிறது. அதன்பிறகு இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்காக இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள அணி வீரர்கள் 20 பேர், மாற்று வீரர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோர் 14 நாட்கள் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்திற்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 20ஆம் தேதி இந்த தனிமைப்படுத்துதல் தொடங்கியது. இதில் அஸ்வின், மயங்க் அகர்வால், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பு விமானம் மூலமாக மும்பைக்கு சென்று வீரர்களுடன் தனிமைப்படுத்துதல் இணைந்துள்ளன. இந்நிலையில் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா மும்பைக்குச் சென்று அணியுடன் இணைந்துள்ளார். இதில் அணி வீரர்கள்  3 ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனைக்குப் பிறகே  மும்பையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் .தற்போது ஜடேஜாவும் இவர்களுடன் இணைந்து தனிமைப்படுத்தி கொண்டார் .இங்கிலாந்துக்கு புறப்படும் முன்பாக  வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்படும்.

Categories

Tech |