இங்கிலாந்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட உள்ள ,இந்திய அணியின் புதிய ஜெர்சியை ஆல்ரவுண்டரான ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
வருகின்ற ஜூன் மாதம் 18 ம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்த தொடரில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் அனைவரும், தற்போது மும்பையில் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான அறிவிப்பை வெளியிட்டது.
அதில் போட்டி ஒருவேளை டை அல்லது டிராவில் முடிந்தால், போட்டி சூப்பர் ஓவர் முறையில் நடைபெறாது என்று தெரிவித்துள்ளது. இதனால் போட்டி டிரா அல்லது டையில் முடிந்தால் இரு அணிகளுக்கும் சாம்பியன்ஷிப் பட்டம் பகிர்ந்தளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்தப் போட்டிக்கான இந்திய அணியின் புதிய ஜெர்சியை அணிந்துகொண்டு இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புதிய ஜெர்சி 90- களில் இந்திய அணியின் டெஸ்ட் போட்டியின் அணிந்திருந்த ஜெர்சியை போல் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
⏪Rewind to 90’s 👕 #lovingit #india pic.twitter.com/bxqB6ptfhD
— Ravindrasinh jadeja (@imjadeja) May 29, 2021