Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் …. 71 விக்கெட் கைப்பற்றி ….. முதலிடத்தை பிடித்த அஸ்வின் …!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி வீரரான தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தை பிடித்துள்ளார்.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை  கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது . இதில் இந்தியா , நியூசிலாந்து ,இங்கிலாந்து உட்பட 9 அணிகள் பங்கேற்றன. இந்நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா , நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றது. இதையடுத்து உலக டெஸ்ட்  சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன . இந்தப் போட்டி கடந்த ஜூன் 18ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டனில் நடந்த போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி, வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி வீரரான தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தில் பிடித்துள்ளார். இவர் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 71  விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் 70 விக்கெட்டுகளை கைப்பற்றி 2 வது இடத்தையும், இங்கிலாந்து வீரர் பிராட் 69 விக்கெட்டுகளை கைப்பற்றி 3 வது இடத்தையும், நியூசிலாந்து வீரர் சவுத்தி 56 விக்கெட்டுகளை கைப்பற்றி 4-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இதையடுத்து  அதிக ரன்களை குவித்த பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர்  லபுசேன் 13 டெஸ்ட் போட்டியில் விளையாடி 1675 ரன்களை எடுத்து முதலிடத்தை பிடித்துள்ளார். இவருக்கு அடுத்ததாக இங்கிலாந்து வீரர்        ஜோ ரூட் 1660 ரன்களை  எடுத்து 2 வது இடத்தைப் பிடித்துள்ளார்.

Categories

Tech |