Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலக  டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் …! ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டதற்கு காரணம் இதுதான் …!!!

உலக  டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக, இந்திய அணியில் இடம்பெறும் வீரர்களின் பட்டியலை நேற்று பிசிசிஐ வெளியிட்டது .

உலக  டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியானது , இங்கிலாந்து நாட்டின் வரும் ஜூன் 18-ஆம் தேதி முதல் தொடங்கி ஜூன் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்கின்றன. எனவே இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பட்டியலை , நேற்று பிசிசிஐ வெளியிட்டது. இந்த பட்டியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ,ஹர்திக் பாண்டியா இடம்பெறவில்லை. அவர் இந்திய அணியில் நீக்கப்பட்டதற்கு , சில முக்கிய காரணங்கள் இருப்பதாக, பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா கடந்த உலகக் கோப்பை போட்டியின் போது, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் .

ஆனால் அதன்பிறகு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டதால், அறுவை சிகிச்சை செய்து கொண்டார். சிகிச்சைக்குப்பின் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர் ,சமீபத்தில்  நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டி மற்றும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஐபில் தொடர் போட்டிகளில் , அவர் பவுலிங் செய்யவில்லை. தற்போது அவரின் உடற்தகுதி  பிட்டாக இல்லை என்பதால் இந்திய டெஸ்ட் போட்டி அணியில் அவர் இடம்பெறவில்லை. இதனால் ஹர்திக் பாண்டியா, இந்திய அணியில் இடம்பெறாமல் போனது அவருக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது .

Categories

Tech |