ஆடவருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று முதல் தொடங்குகிறது.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி செர்பியாவில் தலைநகர் பெல்கிரேடில்இன்று முதல் தொடங்குகிறது. இதில் ஆடவருக்கான போட்டிகள் இன்று முதல் நடைபெறுகிறது.இதில் 105 நாடுகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர் .
இதில் இந்திய அணி சார்பில் கோவிந்த் சஹானி ,தீபக் குமார் , ஆகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர் .மேலும் அனுபவம் மற்றும் இளம் வீரர்கள் உள்ளடக்கிய இந்திய அணி போட்டியில் கலந்து கொள்வதால் நிச்சயம் வெற்றி பெற்று இந்தியாவுக்காக பதக்கங்களை குவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.