உலக அளவில் சுமார் 22 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக ஊரடங்கு மற்றும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆகியவற்றின் மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்தி வருகின்றது. இருப்பினும் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்தபாடில்லை. அதாவது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. இந்நிலையில் தற்போது உலக அளவில் சுமார் 22 கோடிக்கும் அதிகமானோர் உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி உலக அளவில் மொத்தம் 22,97,94,207 பேருக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து 20,64,34,168 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் 47,12,924 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தற்போது 18,647,115 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் 98,716 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.