ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனில் உள்ள தனது குதிரைகளை பத்திரமாக மீட்ட பெண்.
உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில் கீவ் நகரைச் சுற்றிலும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் எஸ்டோனியாவில் வசித்து வரும் கீவ் நகரைச் சேர்ந்தவர் மாஷா லெபிமோவா. இவர் உக்ரைனில் தனது சொந்த வீட்டில் வாஷ்யா என்று குதிரை ஒன்றை வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் ரஷ்ய படைகள் கீவ் நகரை சுற்றி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் தனது குதிரைகளை காக்க எண்ணி எஸ்டோனியாவில் இருந்து வாஷ்யாவுடன் பண்ணையில் இருந்த 6 குதிரைகளையும் சேர்த்து சொந்த ஊருக்கு அழைத்துக் கொண்டு புறப்பட்டார். இந்நிலையில் அவர் அனைத்து போராட்டங்களையும் தாண்டி தம்மையும் தன் குதிரையும் காத்துக்கொண்டு போலாந்து எல்லை கிராமத்திற்கு பத்திரமாக வந்து சேர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து வாயில்லா ஜீவனை காக்க உயிரை பணயம் வைத்த மாஷா லெபிமோவாவின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.