Categories
உலக செய்திகள்

நாட்டில் அமைதி வேண்டும்… உக்ரைன் சிறுமியின் மனதை நொறுக்கும் பாடல்…!!!

உக்ரைன் நாட்டில் 9 வயது சிறுமி, தன் நாட்டில் தாக்குதல் நிறுத்தப்பட்டு, அமைதி நிலவ வேண்டும் என்று கண்ணீரோடு பாடிய பாடல் கேட்போரின் மனதை நொறுக்கியுள்ளது.

உக்ரைன் நாட்டின் மீதான, ரஷ்யப்படைகளின் தாக்குதல் அதிகரித்து கொண்டிருக்கிறது. எனவே, மக்கள் தங்களை காக்க அந்நாட்டிலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் உக்ரைன் நாட்டில் அமிலியா என்ற 9 வயதுடைய சிறுமி, “என் வாழ்க்கையை நான் வரைகிறேன்” என்று ஒரு பாடலை பாடியுள்ளார்.

காண்போரின் மனதை உருக செய்யும் அந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், அழுதுகொண்டே பாடும் அமிலியாவின் பாடல் உலக நாடுகள் முழுக்க பல மொழிகளில்,  மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |