Categories
உலக செய்திகள்

உக்ரைன் போரை நிறுத்த சமாதான குழு வேண்டும்…. மோடியை பரிந்துரைக்கும் மெக்சிகோ…!!!

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் போரை நிறுத்துவதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உள்ளிட்ட சமாதான பேச்சுவார்த்தை குழுவை நியமிப்பதற்கு மெக்சிகோ பரிந்துரைத்திருக்கிறது.

உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் சுமார் ஏழு மாதங்களை தாண்டி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதில், உக்ரைன் படையினரும், ரஷ்யாவை எதிர்த்து வருகின்றன. இந்த போரில் இரு தரப்பிலும் உயிர் பலிகள் ஏற்பட்டு கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மெக்சிகோ நாட்டின் வெளியுறவு துறை அமைச்சராக இருக்கும், மார்செலோ லூயிஸ் ரஷ்யா மேற்கொள்ளும் போரை நிறுத்துவதற்கு இந்திய நாட்டு பிரதமர் நரேந்திர மோடி, போப் பிரான்சிஸ், ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளராக இருக்கும் ஆண்டனியோ குட்டர்ஸ் போன்றோரை உள்ளடக்கிய சமாதான பேச்சுவார்த்தை குழுவை நியமனம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறார். மேலும், தங்கள் நாட்டின் அதிபரான ஆண்ட்ரெஸ் மானுவேல் கூறிய திட்டத்தையே தான் முன்மொழிந்ததாக தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |