Categories
உலக செய்திகள்

ரஷ்யப்போர் எதிரொலி…. கடனாளியான நாடுகள்… கடும் நிதிநெருக்கடி…!!!

இலங்கையை தொடர்ந்து பல நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி பல சிக்கல்களை சந்தித்து கொண்டிருக்கிறது.

இலங்கையில் பொருளாதாரம் மீண்டு வர இன்னும் நான்கு வருடங்கள் ஆகும் என்று சர்வதேச நிதியம் கூறி இருக்கிறது. இலங்கையை போலவே இன்னும் சில நாடுகளும் கடும் கடன் நெருக்கடியில் மாட்டிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக நிதி நெருக்கடியில் சிக்கி கடன்கள் பெற்ற நாடுகளில் அர்ஜென்டினா முதலிடத்தில் இருக்கிறது. அடுத்ததாக உக்ரைன் நாடு, ரஷ்ய படையெடுப்பால் மிக மோசமான நிலையில் இருக்கிறது. திருப்பி செலுத்த வேண்டிய கடன் ஒரு 1.5 லட்சம் கோடி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து துனிசியா நாட்டிலும் பொருளாதார தட்டுப்பாடு 10 சதவீதமாக இருக்கிறது. விரைவில், துனிசியா கடும் நிதி நெருக்கடியை சந்திக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து எகிப்து நாடும் நிதி நெருக்கடியில் சிக்கி, இன்னும் ஐந்து வருடத்திற்குள் சுமார் 7,50,000 கோடி கடன் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறது.

இது மட்டுமல்லாமல் கென்யா, எத்தியோப்பியா, எல் சால்வடார், பாகிஸ்தான் மற்றும் பெலாரஸ் போன்ற நாடுகளும் மோசமான நிலையில் இருக்கின்றன. கொரோனா பரவல், உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய படையெடுப்பு போன்ற காரணங்களினால் சர்வதேச பொருளாதார நிலை பாதிப்படைந்திருக்கிறது.

இதன் விளைவு தான், பல நாடுகளில் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஒரே வழி ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீதான போரை நிறுத்த வேண்டும் மற்றும் கச்சா எண்ணெய் விலையையும் குறைக்க வேண்டும் என்பது தான் என்று நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.

Categories

Tech |