ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, உக்ரைன் போர் நீடிக்கும் பட்சத்தில் கொரோனாவின் போது எதிர்கொண்ட நிதி நெருக்கடியை காட்டிலும் கடும் நெருக்கடியை ஐரோப்பிய நாடுகள் எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்திருக்கிறார்.
உக்ரைனில், ரஷ்யா மேற்கொள்ளும் போர் காரணமாக சர்வதேச சந்தையின் முதுகெலும்பாக திகழும் விற்பனை சங்கிலியில் பெரிதாக தாக்கம் உண்டாகி, பொருட்கள் பல மடங்கு விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவன தலைமை செயல் அதிகாரியான ஹெர்பெர்ட் டைஸ் கூறியிருக்கிறார்.
எனவே, ஐரோப்பிய நாடுகள் அதிக நெருக்கடியில் மாட்டிக்கொண்டு தவிக்கக்கூடிய நிலை உண்டாகும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இந்த போராட்டத்தால் உக்ரைன் நாட்டின் மேற்கு பகுதியில் இயங்கும் கார் உற்பத்தி உதிரிபாகங்கள் தயாரிக்க கூடிய பல்வேறு நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருக்கிறது.
இதன் விளைவாக, பிஎம்டபிள்யூ, ஃபோக்ஸ்வேகன் மற்றும் போர்ஷே போன்ற நிறுவனங்களின் உற்பத்தி பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.