ரஷ்யா, சரணடைந்து விடுங்கள் அல்லது உயிரிழப்பீர்கள் என்று எச்சரித்தும், சிறிதும் அச்சமின்றி சரணடைய போவதில்லை என்று மீதமுள்ள உக்ரைன் வீரர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
ரஷ்யப்படைகள், நேற்று காலை 6 மணிக்குள் சரணடைந்து விடுங்கள் அல்லது உயிர் பலி ஏற்படும் என்று மரியுபோல் நகரில் இருக்கும் உக்ரைன் படைகளை எச்சரித்திருந்தது. மேலும் மதியம் ஒரு மணி அளவில் ஆயுதங்களை போட்டுவிட்டு மொத்தமாக வெளியேறி விடுங்கள் என்றும் எச்சரித்தது.
ஆனால், அதனை சிறிதும் கண்டுகொள்ளாத உக்ரைன் வீரர்கள், இறுதிவரை போராடுவோம் என்று தைரியத்துடன் தெரிவித்திருக்கிறார்கள். மரியுபோல் நகரில் உக்ரைன் வீரர்கள் குறைவான எண்ணிக்கையில் தான் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் சிறிதும் அச்சமின்றி நாங்கள் சரணடையப் போவதில்லை எனவும் கடைசி வரை போராடுவோம் என்றும் கூறியிருக்கிறார்கள்.