ரஷ்ய நாட்டுடனான போர் ஏற்படக்கூடிய ஆபத்திற்கு இடையில் உக்ரைன் நாட்டில் பிரிவினைவாதிகள் மற்றும் ராணுவத்திற்கு இடையேயான மோதல் அதிகரித்து மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா, சோவியத் ஒன்றியம் பிரிவினைக்குப் பின் தனிநாடாக இருக்கும் உக்ரைனை கைப்பற்றி தங்களோடு இணைக்க முயற்சி மேற்கொள்கிறது. இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையே பல வருடங்களாக மோதல் நிலை இருக்கிறது. இந்நிலையில், உக்ரைனின் எல்லைப்பகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான படைகளை ரஷ்யா குவித்துள்ளது.
எனவே, எப்போது வேண்டுமானாலும் உக்ரைன் நாட்டில் போர் ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இதனிடையே உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில் இருக்கும் டன்ட்ஸ்க் என்ற மாகாணத்தில் தனிநாடாக மாற வேண்டுமென்று கோரிக்கை வைத்து போராடி கொண்டிருக்கும் பிரிவினைவாதிகளை எதிர்த்து அந்நாட்டு இராணுவத்தினர் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.