Categories
உலக செய்திகள்

தானிய ஏற்றுமதிக்கான ஒப்பந்தம்…. இன்று கையெழுத்திடும் உக்ரைன்-ரஷ்யா நாடுகள்…!!!

உக்ரைன் நாட்டில் தடை செய்யப்பட்ட தானிய ஏற்றுமதியை புதுப்பிப்பதற்காக உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

உக்ரைன் மற்றும் ரஷ்யா, சூரியகாந்தி எண்ணெய், கோதுமை உட்பட மற்ற தானியங்களை ஏற்றுமதி செய்து கொண்டிருந்தன. இந்நிலையில் ரஷ்யாவு உக்ரைன் நாட்டின் மீது பல மாதங்களாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இதனால் உக்ரைன் நாட்டின் தானிய ஏற்றுமதி பாதிப்படைந்திருக்கிறது.

இதன் காரணமாக, உலக நாடுகளில் தானியங்களின் விலை அதிகரித்திருக்கிறது. இது மட்டுமல்லாமல் உக்ரைன் நாட்டின் கருங்கடல் பகுதியில் தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதை ரஷ்யா தடுத்தது. எனவே, உலக நாடுகளில் உணவு பற்றாக்குறையும் ஏற்பட்டது. இந்நிலையில் இதனை சரி செய்ய இரண்டு நாடுகளும் சுமுகமான முடிவை மேற்கொண்டுள்ளன.

அதன்படி, உக்ரைன் மற்றும் ரஷ்யா தடை செய்யப்பட்ட கருங்கடல் பகுதியில் தானிய ஏற்றுமதியை புதுப்பிப்பதற்காக ஒப்பந்தம் செய்திருக்கின்றன. உலக நாடுகளில் ஏற்படும் உணவு பற்றாக்குறையிலிருந்து மீள இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. போரில் ஈடுபட்டு  வரும் இரண்டு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Categories

Tech |