Categories
உலக செய்திகள்

உக்ரைன் விவகாரம்… நாங்கள் யார் பக்கமுமில்லை… இலங்கை அரசு வெளியிட்ட தகவல்…!!!

இலங்கை அரசு தற்போதைய நிலையில் உக்ரைன் மற்றும் ரஷ்யா பிரச்சனையில் நடுநிலையை கடைப்பிடிப்பதாக அறிவித்திருக்கிறது.

உக்ரைன், நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்திருப்பது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பல நாடுகள் ரஷ்யாவை எதிர்த்து வருகின்றன. எனினும், ஒரு சில நாடுகள் ரஷ்யாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதோடு, உக்ரைன் நாட்டிற்கும் ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலையாக இருக்கின்றன.

அந்த வகையில், இலங்கை வெளியுறவுத்துறை மந்திரியான, ஜெயநாத் கொலம்பகே தெரிவித்திருப்பதாவது, உக்ரைன்-ரஷ்யா பிரச்சனையை நாங்கள் கவனித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், நாங்கள் எந்த நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கப்போவதில்லை. எல்லாவற்றிற்கும் ஒரு தனி காரணங்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |