Categories
உலக செய்திகள்

உக்ரைன் நாட்டிற்கு எதிராக திரட்டப்படும் படைகள்… பிரிவினைவாதிகளின் தலைவர் உத்தரவு…!!!

உக்ரைனில் இருக்கக்கூடிய பிரிவினைவாதிகளுக்கான தலைவர் அந்நாட்டிற்கு எதிராக படைகளை திரட்டுவதற்கு உத்தரவிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நாடு தன் எல்லை பகுதியை ரஷ்ய நாட்டுடன் பகிரப்படுகிறது இதனிடையே உக்ரைன் நாட்டின் கிரிமியா தீபகற்பத்தை கடந்த 2014ம் வருடத்தில் ரஷ்யா கைப்பற்றி அப்பகுதியை தங்கள் நாட்டோடு சேர்த்துவிட்டது. எனவே, உக்ரைன் நாட்டினுடைய டொனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் ஆகிய இரண்டு மாகாணங்களை தங்கள் நாட்டுடன் சேர்க்க வேண்டுமென்று அந்த மாகாணங்களில் ஆயுதமேந்திய பிரிவினைவாத குழுக்கள் தோன்றியது.

இந்த பிரிவினைவாத குழுக்கள் உக்ரைன் நாட்டை சேர்ந்த பாதுகாப்பு படையினரை அவ்வபோது தாக்கும் இந்த குழுக்களுக்கு, ரஷ்ய அரசு ஆயுத உதவிகளை அளித்து வருகிறது. தற்போது, ரஷ்யப் படைகள், உக்ரைன் நாட்டின் எல்லைப்பகுதியில் குவிந்திருக்கின்றன. எப்போது வேண்டுமானாலும், தாக்குதல் தொடங்கலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், டொனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் ஆகிய மாகாணங்களில் இருக்கும் பிரிவினைவாத குழுக்களுடைய தலைவரான டெனிஸ் புஷிலின், தங்களிடம் உள்ள மொத்த படைகளையும் உக்ரைன் நாட்டிற்கு எதிராக எல்லைப்பகுதியில் குவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். எனவே இவ்விரு மாகாணங்களை சேர்ந்த, குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் என்று அதிகமானோரை ரஷ்ய நாட்டிற்கு வெளியேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

Categories

Tech |