Categories
உலக செய்திகள்

மொழி பெயர்ப்பாளரால் எரிச்சலடைந்த உக்ரைன் அதிபர்…. என்ன காரணம்?… வெளியான தகவல்…!!!

உக்ரைனில் ஒரு மொழிபெயர்ப்பாளர் அதிபரின் உரையை சரியாக மொழிபெயர்க்காமல் அவரை எரிச்சலடைய செய்திருக்கிறார்.

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, துருக்கி நாட்டின் அதிபரான எர்டோகன் மற்றும் ஐ.நாவின் பொதுச்செயலாளராக இருக்கும் ஆண்டனியோ குட்டரஸ் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். அப்போது போர் பற்றி அவர்களுடன் ஆலோசித்திருக்கிறார். அந்த சமயத்தில் அவர் பேசிய கருத்துக்களை அவரின் மொழிபெயர்ப்பாளர் ஆங்கிலத்தில் அவர்களிடம் மொழி பெயர்த்து கூறிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது, அந்த மொழிபெயர்ப்பாளர் ஜெலன்ஸ்கி பேசிய கருத்துக்களை முழுவதுமாக மொழிபெயர்த்து கூறாமல் இருந்ததால், அதிபர் எரிச்சலடைந்தார். எனவே, உக்ரைன் நாட்டு மொழியில் தான் பேசியதை தானே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அவர்களிடம் பேசியிருக்கிறார்.

Categories

Tech |