Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்… அதிபர் ஜெலென்ஸ்கி மனைவியிடம் கூறிய 2 வார்த்தை…!!!!

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்த அன்று அதிபர் ஜெலன்ஸ்கி தன் மனைவியிடம்  கூறிய வார்த்தையை தற்போது அவர் கூறியிருக்கிறார்.

உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து ரஷ்யா 40 நாட்களை கடந்து தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி அன்று அதிகாலை நேரத்தில் ரஷ்யப் படைகள் உக்ரைன் நாட்டின் மீது தாக்குதலை மேற்கொண்டது. அப்போது ஆயிரக்கணக்கான வீரர்களும் உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்தனர்.

அந்த நாள் திடீரென்று வெடிகுண்டு சத்தம் கேட்டவுடன் பதறிக்கொண்டு கண்விழித்ததாக அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவி Olena Zelenska கூறியுள்ளார். மேலும் அது வெடிகுண்டு சத்தம் தான் என்று புரிவதற்கு வெகுநேரம் ஆனதாகவும் கூறியிருக்கிறார். அந்த சமயத்தில் கணவர் தன் அருகில் இல்லை என்றும், உடைமாற்றிக்கொண்டு அதன்பிறகு வந்தார் என்றும் கூறியிருக்கிறார்.

அப்போது தன்னிடம் இரண்டு வார்த்தையில் பதில் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். அதாவது  தொடங்கி விட்டது என்று மட்டும் அவர் கூறியதாக தெரிவித்துள்ளார். அன்று கடைசியாக ஜெலன்ஸ்கி வெள்ளை சட்டை அணிந்திருப்பதை பார்த்ததாக கூறிய Olena, போர் தொடங்கியதிலிருந்து தற்போது வரை அவர் ராணுவ உடையில் தான் இருக்கிறார் என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் அவர் தன்னிடம் குடியிருப்பிலிருந்து வெளியேற கூடிய நிலை ஏற்பட்டால் தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் தான் எடுத்துக்கொள்ள  வேண்டும் என்றும் அவர் கூறியதாக தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |