Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கு உலகளவில் தடை வேண்டும்… உக்ரைன் அதிபர் கோரிக்கை…!!!

உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கி ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கு உலக அளவில் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

ரஷ்ய நாட்டின் மீது உக்ரைன் தொடர்ந்து 50 நாட்களுக்கு மேலாக கடுமையாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. எனவே, உக்ரைன் அதிபர் ரஷ்யா கைப்பற்றிய நகரங்களை சேர்ந்த தங்கள் மக்களை ரஷ்யப் படைகள் கடுமையாக துன்புறுத்துவதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை உலக நாடுகள் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். மேலும், இந்த போரில் குடியிருப்புகளை இழந்து உள்நாட்டிலேயே பிற இடங்களில் புலம்பெயர்ந்து இருக்கும் தங்கள் மக்களுக்கு தற்காலிகமாக குடியிருப்புகளை வழங்கவுள்ளதாக உறுதியளித்திருக்கிறார்.

Categories

Tech |