உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒரு காவல்துறை அதிகாரி தன் சொந்த நாட்டிற்கு துரோகம் செய்துவிட்டு ரஷ்யாவிற்கு ஆதரவு தெரிவித்ததால் கொலை செய்யப்பட்டார்.
ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது 4 மாதங்களாக தொடர்ந்து போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் தெற்கு பகுதியில் இருக்கும் Nova Kakhovka என்னும் இடத்தில் பணிபுரிந்த Serhiy Tomka என்ற காவல் அதிகாரி ரஷ்ய படையினருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
அதாவது, ரஷ்ய நாட்டிற்காக பிரச்சாரம் மேற்கொள்வது, அவர்களுக்கு தகவல்கள் தெரிவிப்பது போன்ற செயல்களை செய்து வந்துள்ளார். அது தன், வருங்காலத்தை நன்றாக அமைக்கும் என்று நம்பியுள்ளார்.
ஆனால் தன் வாழ்க்கை உடனே முடிந்து போகும் என்று அவர் நினைத்து பார்க்கவில்லை. அவர், வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, திடீரென்று சிலர் அவரை குறி வைத்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் உயிரிழந்ததாக உக்ரைன் நாட்டு இராணுவ சிறப்பு ஆபரேஷன் படை பிரிவு தெரிவித்திருக்கிறது.