Categories
உலக செய்திகள்

ஈரான் விமான விபத்தில் எனக்கு ‘சந்தேகம்’ – அதிபர் ட்ரம்ப்!

உக்ரைன் விமான விபத்து அதிகப்படியான சந்தேகங்களை எழுப்புகிறது, யாராவது தவறு செய்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 8ஆம் தேதி உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமான போயிங் 737 விமானம் 180 பயணிகளுடன் ஈரான் தலைநகர் டெஹ்ரானிலிருந்து புறப்பட்டது. ஆனால், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தெளிவான தகவல்கள் வெளிவராமல் மர்மமாகவே இருந்து வருகிறது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறுகையில், “சிலர் இயந்திர கோளாறினால் விமானம் விபத்துக்குள்ளானதாக கூறுகிறார்கள். ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை, அழகிய, கடின சுற்றுப்புறத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, யாராவது தவறு இழைத்திருக்கலாம். ஈரானிய ராணுவத்தால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்படிருக்கலாம் என அமெரிக்க ஊடகங்கள் கூறியுள்ளதை குறிப்பிட்ட அவர் இந்த விபத்தில் சந்தேகங்கள் உள்ளது” என்றார்.

Categories

Tech |