Categories
உலக செய்திகள்

தலைநகர் கீவிற்கு செல்ல விரும்பிய ஜெர்மன் அதிபர்…. கோரிக்கையை நிராகரித்த உக்ரைன்…!!!

ஜெர்மனி நாட்டின் அதிபர் ஐரோப்பிய நாட்டு தலைவர்களோடு உக்ரைன் தலைநகருக்கு சுற்றுப் பயணம் செல்லவிருப்பதாக தெரிவித்த நிலையில் உக்ரைன் அதனை மறுத்திருக்கிறது.

உக்ரைன் நாட்டில் ரஷ்யா மேற்கொள்ளும் போர்,  அந்நாட்டின் தற்போதைய நிலை பொருளாதார தடைகள் போன்றவை தொடர்பில் ஆலோசனை செய்வதற்காக போலந்து நாட்டிற்கு ஜெர்மன் அதிபர் ஸ்டெய்ன்மியர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விரும்பியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  இதைத்தொடர்ந்து அவர் எஸ்டோனியா, லிதுவேனியா மற்றும் லாட்வியா போன்ற நாடுகளின் அதிபர்களோடு சேர்ந்து உக்ரைன் நாட்டின் தலைநகருக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள விரும்புவதாக கூறியிருக்கிறார்.

ரஷ்யா, ஜெர்மனி நாட்டுடன் அதிக நட்புறவில் இருப்பது அனைவருக்கும் தெரிந்தது. எனவே தற்போது தங்கள் நாட்டின் தலைநகருக்கு ஜெர்மன் அதிபர் வருவதை உக்ரைன் அரசு விரும்பவில்லை. வேண்டுமெனில் வரும் நாட்களில் இந்த நிலை மாறக்கூடும் என்று உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒரு ராஜதந்திரி தெரிவித்திருக்கிறார். ஜெர்மன் அதிபர் தன் கோரிக்கையை உக்ரைன் மறுத்துவிட்டதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

Categories

Tech |