Categories
உலக செய்திகள்

உக்ரைன் நாட்டின் தானிய பிரச்சனை… களத்தில் இறங்கிய துருக்கி…!!!

உக்ரைன் நாட்டிலிருந்து பாதுகாப்பாக தானியங்களை ஏற்றுமதி செய்ய ரஷ்யா, துருக்கி உக்ரேன் போன்ற நாடுகளின் ராணுவ பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளை சந்திக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்திருப்பது உணவு பாதுகாப்பில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. மேலும் உலக நாடுகளில் உணவுப் பொருட்களின் விலையும் வெகுவாக அதிகரித்தது. எனவே, இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பிரச்சனையில் ஐக்கிய நாடுகள் மன்றம், ரஷ்யா, உக்ரைன் நாடுகளுடன் சேர்ந்து துருக்கி முக்கிய பங்களித்துக் கொண்டிருக்கிறது.

ரஷ்யா மேற்கொண்ட போருக்கு பின் தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கு உக்ரைன் போராடிக் கொண்டிருக்கிறது. தெற்கு கடற்கரை பகுதியில், போர் காரணமாக துறைமுகங்கள் முடக்கப்பட்டது.

இது மட்டுமல்லாமல் தானியங்களை திருடி ரஷ்யா தங்கள் நட்பு நாடுகளுக்கு விற்பதாக உக்ரைன் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறது. இதனை ரஷ்யா மறுக்கிறது. இந்நிலையில்  தானியங்கள் பிரச்சனை குறித்து தீர்வு காண்பது தான் உலக நாடுகளுக்கு தேவை என்று ஐநா பொதுச் செயலாளர் கூறியிருக்கிறார்.

Categories

Tech |