உக்ரைன் நாட்டில் ரஷ்யப்படைகள் வீசிய வெடிகுண்டில் இரண்டு சிறுவர்களும் அவர்களின் தாயும் காயமடைந்துள்ளனர்.
உக்ரைன் நாட்டின் Dnipropetrovsk Oblast என்ற பகுதியைச் சேர்ந்த Olena என்ற பெண், ரஷ்யப்படைகள் வீசியெறிந்த குண்டு தன் வீட்டை நோக்கி வருவதை ஜன்னல் வழியே பார்த்துள்ளார். வீடு வெடித்து சிதற போவதை அறிந்த அவர், உடனடியாக தன் இரட்டை பிள்ளைகளை அழைத்து தனக்கு அடியில் வைத்து மறைத்து கொண்டு கவிழ்ந்திருக்கிறார்.
அதற்குள் குண்டு வெடித்து, ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறிவிட்டது. அதற்குப் பின் என்ன நடந்தது? என்று அவர்களுக்கு தெரியவில்லை. மீட்புக்குழுவினர் மூவரையும் மீட்ட போது மூவரும் கண்பார்வையை இழந்து விட்டனர். அந்நாட்டில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. எனவே, அவர்களை பரிசோதித்த மருத்துவர் போலந்து நாட்டில் இருக்கும் பேராசிரியர் ஒருவருக்கு மூவரின் புகைப்படங்களையும் அனுப்பியுள்ளார்.
உடனடியாக அவர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். ஆனால், அவர்கள் போலந்து நாட்டை சென்றடைய ஒரு வாரம் ஆனது. மூவரையும் பரிசோதித்த மருத்துவர், அந்த பெண் கண் பார்வையை இழந்து விட்டதை அறிந்தார். எனினும், Olena பசியுடன், பதற்றத்தில் அழுதுகொண்டிருக்கும் தன் பிள்ளைகளை பார்க்க முடியாமல் போனதை எண்ணி அழுதார்.
பல நோயாளிகளை கண்ட மருத்துவர், Olena-வையும் அவரின் பிள்ளைகளையும் பார்த்து கலங்கி விட்டார். எனவே, அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அவரின் ஒரு கண்ணில் கண்ணாடித் துண்டு இருந்ததால், அந்த கண் பலமாக காயமடைந்திருந்தது. அறுவை சிகிச்சை மிகவும் சவாலாக இருந்துள்ளது.
இரு தினங்களுக்கு பின் Olena தன் பிள்ளைகளை மீண்டும் பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சியடைந்தார். அவரின் இரு பிள்ளைகளில் ஒருவருக்கு ஒரு கண் பாதிப்படைந்தது. மேலும், குண்டுவெடிப்பை நேரில் கண்டதால் அதிர்ச்சியில் அவர்கள் தூங்காமல் இருந்திருக்கிறார்கள். எனவே, மனநல ஆலோசகரிடம் அழைத்துச் செல்லப்பட்டனர். தற்போது அவர்கள் நன்றாக தூங்குவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.