Categories
உலக செய்திகள்

மே மாதம் முடிவடையும் போர்…. ரஷ்யாவின் திட்டத்தை தெரிவித்த உக்ரைன் ராணுவம்…!!!

உக்ரைன் நாட்டின் ராணுவம் ரஷ்யா வரும் மே மாதம் 9ம் தேதிக்குள் போரை நிறுத்திக் கொள்ள விரும்புவதாக தெரிவித்திருக்கிறது.

உக்ரைன் நாட்டில், ரஷ்யப் படைகள் தொடர்ந்து ஒரு மாதமாகப் போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் நாட்டின் பல முக்கிய நகரங்கள் ரஷ்ய இராணுவத்தால் கைப்பற்றப்பட்டிருக்கிறது.  இதற்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பிலும் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், ரஷ்யா மே மாதம் 9ம் தேதிக்குள் போரை நிறுத்திக் கொள்ள விரும்புவதாக உக்ரைன் படை கூறியிருக்கிறது. இதுகுறித்து உக்ரைன் நாட்டின் ஆயுதப்படைகளின் உளவுத்துறை தெரிவித்திருப்பதாவது, வரும் மே மாதம் ஒன்பதாம் தேதி ரஷ்யா, ஜெர்மனியை  போரில் தோற்கடித்த நாளை கொண்டாடுகிறது. அதனால் மே 9 ஆம் தேதிக்குள் போரை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ரஷ்யா தங்கள் படைகளிடம் தெரிவித்திருக்கிறது என்று கூறியுள்ளது.

Categories

Tech |