Categories
உலக செய்திகள்

இவங்க அட்டகாசம் தாங்க முடியல…. மக்கள் பிரதிநிதிகளை கடத்தி சித்திரவதை…. உக்ரைன் அதிபர் வேதனை….!!!

ரஷ்ய படைகள் உக்ரைனின் தெற்கு பகுதிகளில் உள்ள மக்களை துன்புறுத்துவதாகவும், மக்கள் பிரதிநிதிகளை கடத்துவதாகவும் உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் சமீபத்தில் ரஷ்யாவின் போர்க் கப்பலை அழித்தது. இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா கடந்த சில நாட்களாக உக்ரைன் மீது தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதற்கிடையில் ரஷ்யா உக்ரைன் தலைநகர் மரியுபோலை முழுவதுமாக கைப்பற்றியுள்ளது. இதுமட்டுமின்றி கீவ் நகரில் மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் அந்நகரைச் சுற்றி ஆயிரக்கணக்கான உடல்கள் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது, “உக்ரைனின் முக்கிய பகுதிகளில் உள்ள மக்களை சித்திரவதை செய்து அவர்களை துன்படுத்துவதற்காக தனி அறை அமைத்து மக்களின் பிரதிநிதிகளை கடத்தி அங்கு வைத்து சித்திரவதை செய்கின்றனர். இதனால் ரஷ்யாவிடம் உலக நாடுகள் இந்த சம்பவம் தொடர்பாக கேள்வி எழுப்ப வேண்டும்.

இதனை தொடர்ந்து ரஷ்ய வீரர்கள் மனிதாபிமான உதவிகளை தடுத்து வருவதால் அப்பகுதிகளில் உள்ள மக்கள் கடும் பஞ்சத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் ரஷ்ய வீரர்களால் கடந்த நான்கு தினங்களில் 18 பேர் கொல்லப்பட்டதாகவும், 106 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களின் இந்த செயலை பார்க்கும்போது இது திட்டமிட்ட தீவிரவாதத்தை தவிர வேறு எதுவும் இல்லை. மேலும் ரஷ்ய படையினர் சாதாரண குடியிருப்பு பகுதிகளில் உள்ள மக்கள் மீது வலிமை மிகு ஆயுதங்களை உபயோகப்படுத்துகின்றனர்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |