மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் உக்ரைன் நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் நாட்டில் உள்ள கார்கிவ் நகரில் உள்ள மருத்துவமனையில் நேற்று முன்தினம் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்படும்போது மருத்துவமனைக்கு உள்ளே 33 சிக்கிக் கொண்டதாக தெரிய வருகிறது. தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீட்புக்குழுவினர் அதிவிரைவாக செயல்பட்டதால் மருத்துவமனைக்கு உள்ளே சிக்கியவர்களில் சிலரை காயமின்றி மீட்டனர். மேலும் 11 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் 15 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
தீ விபத்தில் காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மின்சாதன கருவியை கவனமின்றி உபயோகித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது என தெரியவந்தது.