ரஷ்யப் படைகள் உக்ரைனின் லீவ் தலைநகர் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்துக்கு மேலாக தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் ரஷ்ய படைகள் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ரஷ்யப் படைகள் நேற்று முதல் உக்ரைனின் தலைநகர் லீவில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. லீவ் நகரமானது போலாந்து எல்லைக்கு அருகில் 45 மைல் தூரத்தில் உள்ளது. இந்த நகரில் ரஷ்ய படைகள் அடுத்தடுத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனை தொடர்ந்து அந்த நகரில் ஏவுகணை தாக்குதல் மற்றும் சில பகுதிகளில் வெடி விபத்துகளும் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் பலியானோர் பற்றி தகவல் ஏதும் வெளிவரவில்லை. இதற்கிடையில் ஜோ பைடன் போலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள பொது ரஷ்ய படைகளின் இந்த தாக்குதல் அச்சத்தை அதிகரித்து உள்ளது.