இங்கிலாந்து நாட்டில் ஹூவாய் நிறுவனத்தின் 5ஜி சேவைக்கு தடை விதிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
சீனாவின் பன்னாட்டு தொலைத்தொடர்பு நிறுவனமாக உள்ள ஹூவாய் நிறுவனம் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு 5ஜி தொழில் நுட்பத்தினை வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஹூவாய் நிறுவனமானது அமெரிக்க பயனாளர்களுடைய தகவல்கள் அனைத்தையும் திருடி சீனாவிற்கு வழங்கி கொண்டிருப்பதாகவும் இத்தகைய காரணத்தினால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் தெரிவித்து அமெரிக்கா ஹூவாய் நிறுவனத்தை சேர்ந்த ஸ்மார்ட் போன்களுக்கு தடைவிதித்தது. அமெரிக்காவின் இம்முடிவை அறிந்த இங்கிலாந்து நாடு ஹூவாய் நிறுவனத்தினுடைய 5ஜி சேவையை பெற்று வரும் நிலையில் அதற்கு தற்போது தடை விதித்துள்ளது.
ஹூவாய் நிறுவனத்தின் தொழில்நுட்ப சாதனங்கள் இங்கிலாந்து நாட்டிலிருந்து 2020-ஆம் ஆண்டிற்குள் முழுவதுமாக அகற்றப்படுவதாக தகவல் கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து இவ்வாண்டின் டிசம்பர் மாதத்திற்கு பின்னர் ஹூவாய் நிறுவனத்தின் புதிய 5ஜி தொழில்நுட்ப சாதனங்கள் வாங்குவதற்கான தடை விதிக்கப்படும் என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்ற தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இத்தகைய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.