தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாகவும் நடிகையாகவும் வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவர் குரலில் வெளியாகும் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிப்பில் கடைசியாக அனல் மேல் பனித்துளி திரைப்படம் ரிலீசானது. தற்போது இவர் நடிப்பில் மாளிகை, பிசாசு போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.
சினிமாவில் பிஸியாக இருந்தபோதிலும் பாடல்களையும் பாடி வருகிறார். இந்நிலையில், சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார்.
அந்த வகையில் தற்போது வெளியிட்ட வீடியோ பதிவில் இவரும் தனது தோழியும் பாட்டு போட்டு வைத்து விளையாடுகின்றனர். இதில் ஊ சொல்றியா மாமா பாடல் வரிகளை தெரியாமல் ஆண்ட்ரியா திணறினார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.