Categories
அரசியல் மாநில செய்திகள்

#உதயநிதிக்கு_மண்டியிட்ட_திமுக … இந்தியளவில் ட்ரெண்டிங்… அதிர்ச்சியில் கழகத்தினர்..!!

திமுகவின் உதயநிதிக்கு இளைஞரணி செயலாளர் பொறுப்பு  வழங்கப்பட்டுள்ளதை சமூக வலைதளவாசிகள்  கலாய்த்து வருவதால் திமுகவினர் வேதனை அடைந்துள்ளனர்.

ரெட்ஜெயண்ட் மூவி என்ற பெயரின் திரைப்பட தயாரிப்பாளராக இருந்து வந்து , நடிகராக தோன்றி, முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்தவர்  திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின். சினிமா துறையில் தனது கவனத்தை செலுத்தி வந்த இவர் திமுகவின் அரசியல் கூட்டங்களில் பங்கேற்க ஆரம்பித்தார்.

Image result for udhayanidhi stalin

திமுக சார்பில் நடைபெற்ற கிராம சபை கூட்டம் , போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் என கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு அதிகமாக தலை காட்ட தொடங்கினார். மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்தார் உதயநிதி.

Image result for udhayanidhi stalin

திறந்த வெளி வாகனத்தில் நின்று கொண்டு மிக எளிமையாக இவர் முன்னெடுத்த பிரச்சாரம் மக்கள் மத்தியிலும் , திமுக தொண்டர்கள் மத்தியிலும் அதிகமாக பேசப்பட்டது. தேர்தல் முடிவில் திமுக அபார வெற்றி பெற்ற நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலினிடம் பல்வேறு மாவட்ட செயலாளர்கள் உதயநிதி பிரசாரம் குறித்து பாராட்டி சென்றனர்.

 

இதை தொடர்ந்து திமுகவின்  இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுவர் என்று வெளிப்படையான பேச்சு அடிபடத் தொடங்கியது. திமுகவின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றானது முக.ஸ்டாலின் உருவாக்கிய  இளைஞரணி பதவி. முக.ஸ்டாலின் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து தன்னை தளபதியாக முன்னிறுத்திய பதவி தான் இந்த  இளைஞரணி பதவி.

திமுக பொருளாளராக முக.ஸ்டாலின் பொறுப்பேற்றதை தொடர்ந்து  மாநில இளைஞரணி செயலாளராக வெள்ளக்கோவில் சாமிநாதன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது முக.ஸ்டாலின் பொருளாளர் , செயல்தலைவர் மற்றும் திமுக_வின் தலைவராக உயர்ந்துள்ள நிலையில் முக.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின்  இளைஞரணி செயலாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

திமுகவின் பொது செயலாளர் பேராசிரியர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்  இளைஞரணி இருந்த சாமிநாதன் விடுவிக்கப்பட்டு உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். மேலும் சாமிநாதனுக்கு திமுகவின்   உயர்நிலை செயல்திட்டக் குழு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Image result for திமுக சாமிநாதன்

உதயநிதி ஸ்டாலினை இளைஞரணி செயலாளராக அறிவித்ததும் குடும்ப அரசியல் என்ற விமர்சனம் எழுந்தாலும் கூட திமுக தொண்டர்கள் மாநிலம் முழுவதும் பட்டாசு வெடித்து , இனிப்பு வழங்கி உற்சாகமுடன் கொண்டாடி வந்தனர். பின்னர் திமுக தலைவர், நிர்வாகிகள் மற்றும் MLA-க்களை சந்தித்து உதயநிதி வாழ்த்து பெற்றார்.

அனைத்தும் மகிழ்ச்சியாக நடந்து கொண்டு இருந்த சூழலில் தீடிரென ஆரம்பித்தது திமுகவினருக்கு தலைவலி. ட்வீட்_டரில்   என்ற ஹாஷ்டக் சமூக வலைதளத்தில் வைரலானது மட்டுமின்றி இந்தியளவில் ட்ரெண்டிங் ஆனது. இதை கண்டு திமுகவினர் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

மேலும் இணையதளவாசிகள் திமுகவை கலாய்த்தும் , ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் பொறுப்புகளை மீம்ஸ் செய்தும் வருகின்றனர். சமூகவலை தளத்தில் பதிவிடட சிறிது நேரத்தில் இந்தியளவிள் முதலிடத்துக்கு   என்ற ஹாஷ்டக் ட்ரெண்ட் ஆனதால் திமுக தரப்பினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

https://twitter.com/kokartikbharati/status/1146812904034824194

Categories

Tech |