Categories
அரசியல்

உதயநிதி விரைவில் துணை முதல்வர்.. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்… டபுள் ஹேப்பியில் உடன்பிறப்புகள் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, எல்லோரும் சேர்ந்து தான் செய்கிறோம் அமைச்சரவை என்பது கூட்டுப் பொறுப்பு உடையது, எல்லோரும் சேர்ந்து பல திட்டங்களை உருவாக்கி அதை செயல்படுத்துவோம். என் துறையிலும் ஒன்று என்றாலும் அவரிடம் கேட்டுக் கொள்வேன், அவர் துறையில் ஏதாவது ஒன்று என்றால் கேட்டுக் கொள்வோம் அதுதான் இங்கு இருக்கின்ற அமைச்சரவையினுடைய சிறப்பு. அதைத்தான் முதலமைச்சராக அவர்கள் எங்களுக்கெல்லாம் அவ்வபோது அழைத்து, இதை எல்லாம்செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் அதன்படி நடப்போம்.

உதயநிதி துணை முதல்வராக சீக்கிரமாக உங்களைப் போலவே நானும் எதிர்பார்க்கிறேன். தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பில் 20% இட ஒதுக்கீட்டை தமிழக முதல்வர் முன்னுரிமை கொடுத்து சொல்லி இருக்கிறார்கள்.  ஆக தமிழில் பொறியியல் படித்தாலும் அவர்களுக்கு தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் இந்த 20% முன்னுரிமை கொடுக்கப்படும்.

தமிழ் மரபு, தமிழர் மரபு என்றால் அவர்களுக்கு தெரிய வேண்டும் அல்லவா ?  திராவிடம் மாடல் என்னவென்று தெரியணும். தமிழர் மரபு என்னவென்று மற்மொழிக்காரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காக இது ஆங்கிலத்திலேயே மொழிபெயர்க்கப்பட்டு அவர்களுக்கு அதையும் சொல்லி கொடுக்கப்படும் என தெரிவித்தார்.

Categories

Tech |