செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, எப்பொழுதுமே விளையாட்டுத்துறை என்பது தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்று இருக்கின்ற இந்த ஒன்றரை ஆண்டுகளிலே ஆரம்ப பள்ளிகளில் இருந்தே அவைகளை வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்து அங்கேயும் இதற்கான ஊக்கங்களை அளித்துக் கொண்டிருக்கிறார்
விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கின்ற அன்பிற்குரிய மாண்புமிகு உதயநிதி அவர்களும் சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு விளையாட்டு மைதானத்தை உருவாக்குவதற்கு… ஸ்டேடியத்தை உருவாக்குவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்வோம் என்று உறுதி அளித்து இருக்கின்றார். நிச்சயமாக வருகின்ற காலங்களிளே… கல்லூரி இளஞர்களாக இருந்தாலும், பள்ளியில் படிக்கின்ற மாணவர்களாக இருந்தாலும்…
ஏனென்றால், பள்ளியில் படிக்கின்ற பொழுது விளையாட்டு ஆர்வம் வந்தால் தான், அவர்களுக்கு வளருகின்ற போது அந்த விளையாட்டு ஆர்வம் வரும். அந்த அடிப்படையில்தான் தமிழக முதல்வர் அவர்கள்… விளையாட்டுத்துறையை உதயநிதியிடம் கொடுத்து, அதை வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செய்து கொண்டிருக்கிறார்.
உலக அளவில் இருந்த சதுரங்க போட்டியை நடத்துவதற்கு மிக முக்கிய காரணமாக நம்முடைய விளையாட்டுத்துறை அமைச்சர் இருந்தாரோ, அது போல இன்னும் பல்வேறு போட்டிகளையும் வருங்காலத்தில் உலக அளவில் நடைபெறும் போட்டிகளையும் அவர் நிச்சயமாக முன்னின்று நடத்தி, தமிழகத்திலே அவர் சொன்னது அதான். இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் விளையாட்டில் முதல் மாநிலமாக திகழ வேண்டும் என்கின்றதை நிறைவேற்றுவேன் என்று சொல்லி இருக்கின்றார், அதை நிறைவேற்றுவார் என தெரிவித்தார்.