நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கன்னியாகுமரி மக்களவை தேர்தலில் போட்டியிட்ட நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்.இந்நிலையில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கின்றது.இந்த தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ks அழகிரி தலைமையில் நடைபெற்றது.
இதில் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமாரும் பங்கேற்றார். இந்த ஆலோசனை கூட்டத்தில் நாங்குனேரியில் நடைபெற இருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை வெற்றி பெற வைக்கவேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்ற பட்டுள்ளது. முன்னதாக திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமென்று தெரிவித்திருந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் இந்த தீர்மானம் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.