Categories
அரசியல் மாநில செய்திகள்

முழங்கால் , மொட்டை தலை ”முடிச்சு போடும் ஸ்டாலின்” கிண்டல் செய்த உதயகுமார்..!!

முக.ஸ்டாலின் முழங்காலுக்கும் , மொட்டை தலைக்கும் முடிச்சு போடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார் என்று அமைச்சர் உதயகுமார் கிண்டல் அடித்துள்ளார்.

நீலகிரியில் அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட வெள்ள மீட்புப்பணிகள் குறித்து அமைசர் உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்த போது ,நீலகிரியில் அரசு  எடுத்தநடவடிக்கை என்ன என்று நீலகிரி மாவட்ட மக்களுக்கும் தெரியும். மழை தொடர்ந்து ஏழு நாட்களாக பெய்து கொண்டிருக்கிறது . அரசு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் , மீட்பு  மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து முடித்து மக்களின் நன்மதிப்பை பெற்ற பின்பு திடீரென்று  எதிர்க்கட்சி தலைவர் சென்றுள்ளார்.

Seithi Solai

முதல்வர் மீது அபாண்டமாக குற்றம் சாட்டுகின்றார்.நீலகிரியில் ஏற்பட்டுள்ள சவாலான பணியை  சாதனையாக  படைத்த முதல்வரின் செயல்பாட்டை பொறுத்துக் கொள்ள முடியாமல் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல  ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.அவர் முழங்காலுக்கும், மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போட முயற்சி எடுத்துக் கொண்டு இருக்கின்றார்.நீலகிரி மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருக்கிறது.  மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் . நான் ஆணவத்தோடு தெரிவிக்கவில்லை  என்று அமைச்சர்  உதயகுமார் தெரிவித்தார்.

Categories

Tech |