திமுக_வின் அவதூறுகளை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகின்றது. மக்கள் குடிநீரை விலைக்கு வாக்குவதற்க்கே வீதியில் காலிகுடங்களுடன் திரிகின்றனர். ஆனால் அதிமுக அமைச்சர்கள் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் என்பது வெறும் வதந்தி என்று தெரிவித்தனர்.இதையடுத்து தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் குடிநீர் பணிக்காக தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்கி உத்தரவிட்டது.
மேலும் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மழை வேண்டி அனைத்து கோவில்களிலும் யாகம் நடத்தப்பட்டது. அதே போல திமுக_வும் மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் குறித்து பேசிய தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கூறுகையில் , திமுக தண்ணீர் பிரச்சனைக்காக போராட்டம் என நாடகத்தை அரங்கேற்றியுள்ளது. திமுகவின் இந்த அவதூறுகளை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று விமர்சித்தார்.