வாழைப்பூவில் இத்தனை மருத்துவ குணங்களா..?
வாழைப்பூவை இடித்து அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் கலந்து, வதக்கி கை கால் வலி இருக்கும் இடத்தில் ஒற்றடம் கொடுத்து வந்தால் கை கால் எரிச்சல் சரியாகும்.
நாம் உண்ணும் உணவில் வாழைப்பூவையை சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.
வாழைப்பூவை சுத்தம் செய்து சின்ன சின்னதாக நறுக்கி அத்துடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டால் நம் உடலில் கணையம் வலுப்பெற்று, உடலுக்குத் தேவைப்படும் இன்சுலினைச் சுரக்கச் செய்யும், இதனால் சர்க்கரை நோய் குணமாகி விடும்.
உடலில் சூடு இருப்பவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் விட்டு, வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள சூட்டு தன்மை குறைந்து குளிர்ச்சியை அளிக்கும்.
மாதவிடாய் நேரங்களில் பெண்களுக்கு அதிகமாக உதிரப்போக்கு உருவாக கூடும். பெண்கள் வாழைப்பூவில் இருக்கும் வெள்ளை குருத்து மொட்டு பாகத்தை பாதி அளவு எடுத்து, சாறு பிழிந்து சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி சாப்பிட்டு வரலாம்.
அந்த வாழைப்பூவின் மொட்டு குருத்தை அப்படியேயும் சாப்பிடலாம், அவ்வாறு சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு உதிரப்போக்கு கட்டுப்படும். உடல் அசதி மற்றும் வயிற்று வலியும் குறையும்.