Categories
உலக செய்திகள்

‘உரிமைகள் பாதுகாக்கப்படும்’…. கோயில் திறப்பு விழாவில்…. பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி….!!

மறுசீரமைப்பு செய்யப்பட கோயிலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் திறந்து வைத்தார்.

பாகிஸ்தானில் கைபர் பக்துன்வா மாகாணத்தில் இருக்கும் கராக்  மாவட்டத்தில் தெரி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பரம்ஹன்ஸ்ஜி மஹராஜ் கோயிலை ஜாமியத் உலேமா-ஏ-இஸ்லாம் என்ற பழமைவாத அமைப்பினர் ஃபசலைச் சேர்ந்த மதக்குருக்கள்  தலைமையில் கடந்த ஆண்டு டிசம்பரில் அடித்து நொறுக்கி தீ வைத்தனர். இது குறித்து தொடரப்பட்ட வழக்கை அந்நாட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான குல்சார் அகமது விசாரித்தார்.

அப்பொழுது கோயிலை சேதப்படுத்தியவர்களிடமிருந்து நிதியை திரட்டி கோயிலை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனையடுத்து கோயிலானது மறுசீரமைப்பு செய்யப்பட்டது. அதனை கடந்த திங்கட்கிழமை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குல்சார் அகமது திறந்து வைத்தார். மேலும் கோயிலில் கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகையிலும் கலந்து கொண்டார்.

அவர் அதில் கலந்துகொண்டு பேசியதில் ‘உச்சநீதிமன்றம் எப்பொழுதும் சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்கும் நடவடிக்கையை எடுத்து வருகின்றது. எதிர்காலத்திலும் அதனை தொடரும். பாகிஸ்தான் அரசியலமைப்பு படி மற்ற மதங்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளையும் இந்துக்களும் அனுபவிக்கின்றனர். அதிலும்  சிறுபான்மையினரின் மத உரிமைகளின் பாதுகாப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்யும்.

குறிப்பாக மற்ற மதத்தவரின் வழிபாட்டு தலங்களை சேதப்படுத்தும் அளவிற்கு எவர்க்கும் இங்கே அதிகாரமில்லை’ என்றார். மேலும் விழாவில் கலந்து கொண்ட அவருக்கு இந்து அமைப்பினரின் உதவியாளரும் தலைவருமான ரமேஷ் குமார் வாங்க்வானி ஒரு தலைப்பாகையும் புனித நூலான குர்ஆனையும் பரிசாக அளித்தார்.

குறிப்பாக கோயிலை மறுசீரமைப்பு செய்யவதற்கு தலைமை நீதிபதியும் உச்ச நீதிமன்றமும் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக பாகிஸ்தான் இந்து அமைப்பின் தலைவர் ரமேஷ்குமார் வாங்க்வானி நன்றி தெரிவித்துக் கொண்டார்.இவர்  அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். அதிலும் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக்-இ- இன்சாப் கட்சியின் மூத்த தலைவராக இருக்கிறார்.

இவர் கூறியதில் ‘ இதேபோன்று சேதப்படுத்தப்பட்ட நான்கு வரலாற்று கோயில்களையும் மறுசீரமைப்பு செய்யும் பணிகளை மேற்கொண்டால் உலக அளவில் பாகிஸ்தானிற்கு நற்பெயர் ஏற்படும். குறிப்பாக இக்கோவிலை சேதப்படுத்தியவர்களிடமிருந்து 1.94 லட்சம் அமெரிக்க டாலர்கள் வசூலிக்கப்பட்டது. மேலும் கோயிலை சேதப்படுத்திய குற்றத்திற்காக 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்’ என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |