Categories
உலக செய்திகள்

நடந்து வரும் பனிப்போர்…. அவதூறாகப் பேசிய பிரேசில் அதிபர்…. பதிலடி கொடுத்த உச்சநீதிமன்ற நீதிபதி….!!

பிரேசில் அதிபர் அந்நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதியை அவதூறாகப் பேசியக் காட்சியானது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

பிரேசில் நாட்டை ஆளும் வலதுசாரி கட்சியைச் சேர்ந்த அந்நாட்டு அதிபரான ஜெயர் பொல்சொனாரோவுக்கும்  உச்ச நீதிமன்றத்திற்கும் இடையே பனிப்போர் நடைபெறுகிறது. இந்த நிலையில் தெற்கு பிரேசிலில் தனது ஆதரவாளர்களுக்கு இடையில் உரையாடிக் கொண்டிருந்த அந்நாட்டு அதிபர் ஜெயர் பொல்சொனாரோ  உச்சநீதிமன்ற நீதிபதியான லூயிஸ் ராபர்டோ பரோசோவை தகாத வார்த்தைகளால்  பேசியுள்ளார். அப்பொழுது அவரை son of a whore என்று இழிவுபடுத்தி கூறியுள்ளார். இந்த காட்சிகள் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டு பின்னர் நீக்கப்பட்ட போதும் தொடர்ந்து அனைவரிடமும் பகிரப்பட்டு வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் லூயிஸ் ராபர்டோ பரோசோ பேசியுள்ளார்.

அதில் “என்னுடைய செயலானது சிலருக்கு தொந்தரவாக இருந்தால் நான் என் பணியை சரியாக செய்து வருகிறேன் என்று அர்த்தம்” என்று கூறியுள்ளார். மேலும் கடந்த பல நாட்களாகவே பிரேசில் அதிபர் சர்ச்சையான கருத்துக்களை முன்வைத்து வருகிறார். எடுத்துக்காட்டாக, தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டுகளை உபயோகிக்க வேண்டும் என்று கோரிக்கை அளித்துள்ளார். அதிலும் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சத்தினால் தான்  அமெரிக்கா அதிபர் ட்ரம்பை போல பல சந்தேகங்களை கிளப்பி வருகிறார் என்று அரசியல் பிரமுகர்கள் கூறி வருகின்றனர்.

Categories

Tech |