Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘யு.ஏ.இ-யில் நடக்கும் ஐபிஎல் போட்டி’….”பால்கனி ரூம் புக் பண்ணுங்க”….” ரெய்னாவை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் “…!!!

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை ,ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த  முடிவு செய்யப்பட்டுள்ளது.

வீரர்களுக்கு கொரோனா தொற்று  பாதிப்பு ஏற்பட்டதால், பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் ,ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால் ஐபிஎல் ரசிகர்கள் தற்போது உற்சாகம் அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா  தொற்று பரவல் காரணமாக ,  ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் சிஎஸ்கே வீரரான சுரேஷ் ரெய்னாவை வைத்து ,சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். இதற்கு முக்கியமாக கடந்த ஆண்டு நடந்த நிகழ்வு தான் காரணமாக உள்ளது. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த,  ஐபிஎல் போட்டியில்  வீரர்கள் அனைவரும் துபாயில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர். அப்போது  சிஎஸ்கே வீரர் சுரேஷ்  ரெய்னா ,ஒரு போட்டியில் கூட விளையாடாமல், திடீரென்று தொடரில் இருந்து விலகி நாடு திரும்பினார் .

இது ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு காரணமாக சுரேஷ் ரெய்னா பால்கனியுடன் இருக்கும் அறையை கேட்டதாகவும், பால்கனி அறை கிடைக்காததால் அணி அணி நிர்வாகத்திடம் பிரச்சனை ஏற்பட்டு தொடரிலிருந்து வெளியேறியதாக கூறப்பட்டது. அதன் பிறகு தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியேறியதாக கூறப்பட்டது.இந்த நிலையில் தற்போது மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ,ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுவதால் ,’ சுரேஷ் ரெய்னாவுக்கு  பால்கனியுடன் கூடிய அறையை ஒதுக்கி விடுங்கள் ‘,  என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களை போட்டு வைரலாகி வருகின்றன. கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேறாமல் வெளியேறியதற்கு ,அணியில் சுரேஷ் ரெய்னா இல்லாதது முக்கிய காரணமாக கருதப்பட்டது.

Categories

Tech |