Categories
கிரிக்கெட் விளையாட்டு

U19 ஆசிய கோப்பை :இந்தியாவை வீழ்த்தி ….. பாகிஸ்தான் த்ரில் வெற்றி ….!!!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடந்த இந்திய அணிக்கெதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது .

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்து .அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக ஆரத்ய யாதவ் 50 ரன்கள் குவித்தார் .

பாகிஸ்தான் அணி தரப்பில் ஜீசன் சமீர் 5 விக்கெட் கைப்பற்றினார். இதன்பிறகு 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது . ஆனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் இருந்தாலும் பாகிஸ்தான் அணி கடைசி வரை போராடியது. இறுதியாக பாகிஸ்தான் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .இதில் அதிகபட்சமாக முகம்மது சக்சாத் 81 ரன்கள் குவித்தார்.

Categories

Tech |