Categories
கிரிக்கெட் விளையாட்டு

U19 ஆசிய கோப்பை :ஹர்நூர் சிங் அதிரடி ஆட்டம் ….! இந்திய அணி அபார வெற்றி …..!!!

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த ஐக்கிய அரபு அமீரகம் அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது .

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா நகரங்களில் நடைபெற்று வருகிறது .இதில் ‘ஏ ‘பிரிவில் இடம் பிடித்த இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் நேற்று மோதின .இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் குவித்தது.

இதில்  அதிகபட்சமாக  ஹர்நூர் சிங்  120 ரன்னும், கேப்டன் யாஷ் துல் 63 ரன்னும் குவித்தனர். இதன் பிறகு 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐக்கிய அரபு அமீரகம் அணி களமிறங்கியது இறுதியாக அனைத்து விக்கெட் இழப்புக்கு 128  ரன்னில் சுருண்டது.இதனால் 154 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது .இந்திய அணி தரப்பில்  ஹங்கர்கேகர் 3  விக்கெட் கைப்பற்றினார்.

Categories

Tech |