சத்தர்பூரிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்த 14 வயது சிறுமியை, பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தெற்கு டெல்லி சத்தர்பூரில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் சிகிச்சைப் பெற்று வந்த 14 வயதுடைய சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்த 19 வயதுடைய இளைஞரும், அவரின் நண்பரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இது பற்றி பரிசோதனை மைய அலுவலர் கூறும்போது, இந்தியா – திபெத்திய எல்லைப் பகுதி கப்பல் படையின் ( ஐ.டி.பி.பி ) கீழ் இந்த தனிமைப்படுத்தப்படும் மையம் செயல்பட்டு வருகின்றது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட முடியாத நபர்கள் இங்கே சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.. பாதிக்கப்பட்ட அந்த சிறுமியும், குற்றம் சுமத்தப்பட்டுள்ள இளைஞர்களும் அருகேயுள்ள குடிசைப் பகுதிகளில் வசித்து வருகின்றனர்.. இவர்கள் சிகிச்சை பெறுவதற்காக இந்த மையத்தில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர் என்றார்.