Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

2 பெண்கள் மாயம் – போலீஸ் விசாரணை

இரண்டு பெண்கள் மயமானதை தொடர்ந்து விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் செந்துறை சேர்ந்தவர் காசிநாதன். அவரது மகள் தமிழரசி. இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பயின்று வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற தமிழரசி கல்லூரி முடிந்து வெகுநேரமாகியும் வீடு வந்து சேரவில்லை. பல இடங்களில் தமிழரசியை தேடிப் பார்த்தும் கிடைக்காத நிலையில் காசிநாதன் செந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழரசியை போல் நல்லூரை சேர்ந்த பெரியசாமியின் மனைவி ரஞ்சிதா என்பவரும் வீட்டில் மாயமாகியுள்ளார். இந்த புகாரும் செந்துறை காவல் நிலையத்திலேயே பதிவு செய்யப்பட்டது. எனவே 2 பேரையும் தேடும் பணியில் செந்துறை காவல் நிலையத்தினர் ஈடுபட்டுவருகின்றனர்.

Categories

Tech |