புதுச்சேரி அருகே கடைவீதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடும் CCTV காட்சி வெளியாகியுள்ளன.
புதுச்சேரி நகர் பகுதியில் சமீப காலமாக வாகன திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் போலீசார் இதை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு பெருமாள் கோவில் கடை வீதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று திருடு போனது.மேலும் அங்கிருந்த CCTV-வில் மர்ம நபர்கள் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.
இந்நிலையில் இரு சக்கர வாகனத்தின் உரிமையாளர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் CCTV காட்சிகளளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், இருசக்கர வாகனங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட பூட்டுகளை பயன்படுத்துமாறும் போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.