மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் விவசாயி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டதிலுள்ள கொள்ளிடம் பகுதியில் ஒரு தாடாளன் கோவில் தெருவை சார்ந்தவர் ரமேஷ். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் நேற்று பழையாறு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஓலகொட்டாய்மேடு என்ற பகுதியில் வைத்து எதிரே வந்த எருக்கூர் கிராமத்தைச் சார்ந்த சிவராஜ் என்பவரின் மோட்டார் சைக்கிளின் மீது ரமேஷின் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் விவசாயி ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த சிவராஜ் என்பவர் பலத்த காயமடைந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த சிவராஜ் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.