தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காயல்பட்டினத்தைச் சேர்ந்த இரண்டு பேர் குணமடைந்து நேற்று மாலை வீடு திரும்பினர்.
கொரோனா வைரஸ் இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஏப்ரல் 14 ஆம் தேதிவரை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை ஏப்ரல் 3 ஆம் தேதிவரை நீட்டித்து பிரதமர் மோடி நேற்று முன்தினம் அறிவித்தார். அதைத்தொடர்ந்து மத்திய அரசு ஊரடங்கு உத்தரவின் வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று காலை வெளியீட்டது.
![]()
இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, தமிழகத்தில், 38 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 1,242 ஆக உயர்ந்தது என்றார். மேலும் தமிழகத்தில் இன்று (நேற்று) ஒரே நாளில் மட்டும் 37 பேர் குணமாகியுள்ளனர்.. இதனால் தமிழகத்தில் இதுவரை 117 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்று கூறினார்..
இதனிடையே தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் காயல்பட்டினத்தைச் சேர்ந்த இரண்டு பேர் குணமடைந்து நேற்று மாலை வீடு திரும்பினர். அப்போது அவர்கள் இருவரும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் அவர்கள் இருவரும் 28 நாள்கள் வீட்டில் கண்காணிப்படுவார்கள் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.