Categories
தேசிய செய்திகள்

இந்திய ராணுவம் பதிலடி… 2 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு..!!

 பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரின் உரி பகுதியில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் நடத்திய பதிலடியில் இரண்டு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதிலிருந்தே, இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரின் உரி பகுதியில் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் சிக்கி இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.

Image result for Two Pakistani soldiers were killed in a retaliation by the Indian Army following the Pakistani army's attack on Kashmir territory.

இதற்குப் பதிலடி தரும் வகையில், இந்திய ராணுவம் திவா பகுதியில் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். முன்னதாக ராணுவ தளபதி பிபின் ராவத், எல்லைப் பகுதிகளில் சூழ்நிலை மோசமாகியுள்ளது. ஆனால், பதிலடி தர இந்திய ராணுவம் தயாராக உள்ளது எனத் தெரிவித்திருந்தார்.

Image result for Two Pakistani soldiers were killed in a retaliation by the Indian Army following the Pakistani army's attack on Kashmir territory.

எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் நடத்தும் தாக்குதல் சம்பவங்கள் குறித்து மத்திய இணையமைச்சர் ஸ்ரீபத் நாயக், “ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதம் வரை காஷ்மீரில் 950 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. தக்க பதிலடியை இந்திய ராணுவம் கொடுத்து வருகிறது” என்றார்.

Categories

Tech |